கொரோனாவின் அடுத்த அலையை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் - ராதாகிருஷ்ணன்

கொரோனாவின் அடுத்த அலையை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் - ராதாகிருஷ்ணன்

கொரோனாவின் அடுத்த அலையை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் - ராதாகிருஷ்ணன்
Published on

தமிழ்நாட்டில் நோய் எண்ணிக்கை அதிகமாகி தற்போது குறைந்து வரும் நிலையில் நாம் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும் என சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் கொரோனா சிகிச்சை குறித்து சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாட்டில் நாள்தோறும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்து வருகிறோம்.
திருச்சியில் பல இடங்களில் பொதுமக்கள் முக கவசம் அணிவதை சரியாக பின்பற்றுவதில்லை. திருச்சி மாவட்டத்தில் மொத்தம் பத்தாயிரம் படுக்கை வசதிகள் உள்ளன.

தமிழ்நாட்டில் நோய் எண்ணிக்கை அதிகமாகி தற்போது குறைந்து வரும் நிலையில் நாம் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். கொரோனாவின் அடுத்த அலையை தடுக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அப்படி வழங்கும் போது நோயை கட்டுப்படுத்தலாம். சித்த மருத்துவம் முக்கியத்துவம் பெற்று வருகிறது. அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் சித்த மருத்துவ பிரிவு செயல்பட்டு வருகிறது. அங்கு தேவையான அளவு மருத்துவர்கள், செவிலியர்கள் நியமித்து வருகிறோம்.

கொரோனா தொற்றினால் தமிழ்நாட்டில் தான் அதிக அளவிலான மருத்துவர்கள் உயிரிழக்கிறார்கள் என்கிற ஐ.எம்.ஏ. வின் அறிக்கை அரசின் அறிக்கை இல்லை. ஐ.சி.எம்.ஆர் அளிக்கும் அறிக்கை தான் அதிகாரப்பூர்வ அறிக்கை. மருத்துவ கழிவுகள் சுகாதாரமான முறையில் அழிப்பதற்கு அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com