தமிழ்நாடு
நாளை பணிக்கு வராத அரசு மருத்துவர்கள் மீது ‘பிரேக் இன் சர்வீஸ்’ - விஜயபாஸ்கர் எச்சரிக்கை
நாளை பணிக்கு வராத அரசு மருத்துவர்கள் மீது ‘பிரேக் இன் சர்வீஸ்’ - விஜயபாஸ்கர் எச்சரிக்கை
நாளை பணிக்கு வராத மருத்துவர்கள் மீது பிரேக் இன் சர்வீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவர்கள் போராட்டம் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், “மருத்துவர்கள் நாளையும் பணிக்கு வராவிடில் பிரேக் இன் சர்வீஸ் நடவடிக்கை எடுக்கப்படும். பிரேக் இன் சர்வீஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டால் பணி மூப்பு சலுகை ரத்தாகும். பணிக்கு வராத மருத்துவர்கள் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு காலியிடங்களாக அறிவிக்கப்பட்டும். அவர்களுக்கு பதில் மாற்று மருத்துவர்கள் நியமனம் செய்யப்படுவர்” என்று தெரிவித்தார்.