மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு - 7.5 இடஒதுக்கீட்டில் சேலம் மாணவி முதலிடம்!

நீட் மதிப்பெண்களின் அடிப்படையில், இட ஒதுக்கீட்டின் படி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அரசு ஒதுக்கீடு, நிர்வாக பிரிவு ஒதுக்கீடு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு தகுதி பெற்ற மாணவ, மாணவிகளின் தரவரிசை பட்டியலை தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.

பொதுப்பிரிவில் நீட் தேர்வில் 720 மதிப்பெண்கள் பெற்ற விழுப்புரத்தை சேர்ந்த பிரபஞ்சன் முதலிடம் பிடித்துள்ளார். 7.5 சதவிகித இடஒதுக்கீட்டிற்கான தரவரிசைப் பட்டியலில், சேலத்தை சேர்ந்த கிருத்திகா எனும் மாணவி 569 மதிப்பெண்களுடன் தரவரிசைப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com