குடிபோதையில் முகக்கவசமின்றி பயணித்த சுகாதார ஆய்வாளர்: காவலரை தாக்கியதால் பரபரப்பு

குடிபோதையில் முகக்கவசமின்றி பயணித்த சுகாதார ஆய்வாளர்: காவலரை தாக்கியதால் பரபரப்பு

குடிபோதையில் முகக்கவசமின்றி பயணித்த சுகாதார ஆய்வாளர்: காவலரை தாக்கியதால் பரபரப்பு
Published on

முகக்கவசம் அணியாமல் சென்ற மாநகராட்சி சுகாதார ஆய்வாளரொருவர், குடிபோதையில் வாகன தணிக்கையில் இருந்த காவலரை தாக்கியதால் பரபரப்பு. வீடியோ, சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

சென்னை எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் நபர், வாழவந்தான். நேற்று முன்தினம் முழு ஊரடங்கு காரணமாக ஜாபர்கான்பேட்டை காசி எஸ்டேட் 2-வது தெருவில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் முக கவசம் அணியவில்லை. வாகனத்தை நிறுத்திய காவலர் வாழவந்தான், முகக்கவசம் ஏன் அணியவில்லை என விசாரித்தார். அப்போது பைக் பின்னால் அமர்ந்திருந்த நபர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. அதை சுகாதாரத்துறை ஆய்வாளர் தட்டிக்கேட்டபோது, “என்னையே மாஸ்க் அணிய சொல்கிறாயா, இதை கேட்க நீ யார்?” என ஆபாசமாக திட்டியதாக தெரிகிறது.

இதனை காவலர் வாழவந்தான் தன் செல்போனில் படம் பிடித்திருக்கிறார். உடனே குடிபோதையில் இருந்தவர் காவலரின் இடது கையை பிடித்து முறுக்கி செல்போனை பிடுங்கி கீழே போட்டு உடைத்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதமும் முற்றியிருக்கிறது.

பின்னர் இது தொடர்பாக காவலர் வாழவந்தான் எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில் காவல்துறையினருடன் தகராறில் ஈடுபட்டவர் சென்னை அசோக் நகரைச் சேர்ந்த சிவகிருஷ்ணன் என்பது தெரிய வந்தது. இவர் சென்னை மாநகராட்சியில் மண்டலம் 13-ல் 170 வார்டில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வருவதும் தெரிய வந்தது. இந்நிலையில் காவலர் வாழவந்தானுடன் சுகாதார ஆய்வாளர் சிவகிருஷ்ணன் மதுபோதையில் தகராறில் ஈடுபடுவதும், ஆபாசமாக பேசுவதுமான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

இந்த சம்பவம் அசோக் நகர் உதவி ஆணையர் தனபால் விசாரணை நடத்தி வருகின்றனர். அங்கு பதிவாகி உள்ள சிசிடிவி காட்சியையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். ஆனால் புகார் தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com