தமிழ்நாடு
கொசு ஒழிப்பில் அலட்சியம் - 4,200 வீடுகளுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ்
கொசு ஒழிப்பில் அலட்சியம் - 4,200 வீடுகளுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ்
கொசு ஒழிப்பிற்கு ஒத்துழைப்புத் தராத 4 ஆயிரத்து 200 வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்கள், உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் இருப்பது தமிழக சுகாதாரத்துறை சட்டம் 1939 பிரிவு 3ன் படி குற்றமாகும் என சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், கொசு ஒழிப்பிற்கு ஒத்துழைப்புத் தராத 4 ஆயிரத்து 200 வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவர்களுக்கு அபராதம் அல்லது ஆறுமாத சிறைத்தண்டனை கிடைக்கும் என சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.

