கொரோனா பரவல் அச்சம்pt
தமிழ்நாடு
’தமிழகத்தில் கொரோனா பற்றி அச்சப்படத் தேவையில்லை..’ - சுகாதாரத் துறை
ஹாங்காங், சிங்கப்பூரில் கொரோனா பரவல் அதிகரித்துவருவதாக செய்திகள் வெளியான நிலையில், தமிழகத்தில் அச்சப்படத் தேவையில்லை என சுகாதாரத் துறை விளக்கம் கொடுத்துள்ளது.
ஹாங்காங், சிங்கப்பூரில் கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில், தமிழகத்தில் தொற்று குறித்து அச்சப்படத் தேவையில்லை என மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அச்சப்பட தேவையில்லை..
ஹாங்காங், சிங்கப்பூரில் கொரோனா வேகமாக பரவி வருவதுடன், உயிரிழப்புகளும் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று, நாள் ஒன்றுக்கு 8 முதல் 10 பேர் வரை மட்டுமே உறுதி செய்யப்படுவதாகவும், இது வழக்கமான எண்ணிக்கை எனவும் சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது. எனவே மக்கள் அச்சப்படத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.