இன்றைய முக்கியச் செய்திகள்!  

இன்றைய முக்கியச் செய்திகள்!  
இன்றைய முக்கியச் செய்திகள்!  

முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில், திமுக பெண் பிரமுகர் மகன் கைது எனத் தகவல். பிடிபட்டவர் அளித்த தகவலின் பேரில் மேலும் இருவரிடம் காவல்துறையினர் விசாரணை.

சிறுபான்மையினருக்கு அரணாக இருப்பது அதிமுக அரசுதான் என முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம். ஸ்டாலினால் கட்சியையும், ஆட்சியையும் வீழ்த்தமுடியாது எனவும் பரப்புரையில் பேச்சு.

விரைவில் திமுக ஆட்சியமைப்பது நிச்சயம் என வேலூர் தேர்தல் பரப்புரையில் மு.க.ஸ்டாலின் பேச்சு. ஸ்டாலின் முதல்வர் கனவில் மிதப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்ததற்கு பதில்.

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கு கோருகிறார் முதலமைச்சர் எடியூரப்பா. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 14 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவு. இதனிடையே தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள், சபாநாயகரின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர உள்ளனர்.

பண்டிகை மற்றும் விழாக்களின்போது, நீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மனதின் குரல் எனும் மாதாந்திர வானொலி உரையில் பிரதமர் மோடி வலியுறுத்தல்.

விடுமுறை தினமான நேற்று சுமார் இரண்டரை லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசித்தனர். மூலவர் சன்னிதி மூடப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உயர் நீதிமன்றம்.

இந்தோனேசியாவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்றார் மேரி கோம். இந்திய வீராங்கனைகள் சிம்ரன்சித், ஜமுனா, மோனிகா ஆகியோரும் தங்கம் வென்று அசத்தல்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com