தலைப்புச் செய்திகள்: விறுவிறுக்கும் ஐபிஎல், முதல்வர் பிரசாரம் To நாம் தமிழர் வேட்பாளர்கள் அறிவிப்பு

இன்றைக்கான முக்கிய தலைப்புச் செய்திகளை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்...
IPL CM Stalin
IPL CM Stalinpt desk

# 7 தொகுதிகளுக்கான தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு... ஜோதிமணி, விஜய் வசந்த், மாணிக்கம் தாகூர், கார்த்தி சிதம்பரம், விஷ்ணு பிரசாத்துக்கு மீண்டும் வாய்ப்பு...

# கடைசி கட்ட வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் பணியில் பாஜக மும்முரம்... மோடி, அமித்ஷா, நட்டா உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் ஆலோசனை...

# காவிரி நீருக்கான தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி... அதிமுக, பாஜகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்...

# தேர்தல் பரப்புரையில் மீண்டும் செங்கலை கையில் எடுத்த அமைச்சர் உதயநிதி.... மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தாமதமாவதை சுட்டிக்காட்டி பேச்சு...

# வேடந்தாங்கலுக்கு வரும் பறவையை போன்றவர் அன்புமணி ராமதாஸ் என எடப்பாடி பழனிசாமி விமர்சனம்... பாமகவுடனான கூட்டணி அதிமுகவுக்கு வெற்றியை தந்ததில்லை என்றும் பேட்டி...

# சிதம்பரம் தொகுதியில் நாளை முதல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாக திருமாவளவன் பேட்டி... திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றிபெறும் என்றும் நம்பிக்கை...

# நெல்லை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் மாற்றம்.... சிம்லா முத்துச்சோழனுக்கு பதிலாக ஜான்சி ராணி போட்டியிடுவார் என அறிவிப்பு.....

# மக்களவை தொகுதிகளுக்கு அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம்... எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், ஜெயக்குமார் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களை நியமித்தார் இபிஎஸ்.....

# சென்னை தலைமைச் செயலகத்தில் மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை.... நேர்மையான முறையில் தேர்தலை நடத்த அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் வலியுறுத்தல்.....

# மக்களவை தேர்தல், விளவங்கோடு இடைத்தேர்தலில் புகைப்பட வாக்காளர் சீட்டிற்கு பதிலாக தகவல் சீட்டு அறிமுகம்... வாக்காளரின் வரிசை எண்ணை அறிந்து கொள்ள தேர்தல் ஆணையம் சிறப்பு ஏற்பாடு...

# சென்னை தி.நகரில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான 9 கிலோ தங்க நகைகள் பறிமுதல்... உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்றதால் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி...

# அமலாக்கத்துறை காவலுக்கு எதிராக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மனு... அவசர வழக்காக விசாரிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு...

# தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மகள் கவிதாவின் காவல் மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு...புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக தன் மீது பொய் வழக்கு புனையப்பட்டுள்ளதாக கவிதா குற்றச்சாட்டு.....

# ஐபிஎல் லீக் போட்டியில் ஹைதராபாத் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா... மற்றொரு ஆட்டத்தில் சாம் கரண் அதிரடியால் பஞ்சாப்பிடம் பணிந்தது டெல்லி அணி...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com