headlines for the morning of january 2nd 2026
rain, vaikox page

HEADLINES |தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு முதல் வைகோவின் நடைபயணம் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு முதல் வைகோவின் நடைபயணம் வரை விவரிக்கிறது.
Published on

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு முதல் வைகோவின் நடைபயணம் வரை விவரிக்கிறது.

  • கோவை, நீலகிரி மாவட்ட மலையோர பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு... குமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் பரவலான மழை பெய்யும் என வானிலை மையம் கணிப்பு

  • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல்... அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்குமெனவும் கணிப்பு.

  • தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்... சூறைக்காற்று வீசுவதால் மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை...

  • திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்கா கந்தூரி விழாவிற்கு தடைக் கோரிய வழக்கு... உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று விசாரணை

  • போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிராக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மேற்கொள்ளும் சமத்துவ நடைபயணம்... திருச்சியில் இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்...

headlines for the morning of january 2nd 2026
மழைpt web
  • அதிமுக எவ்வளவு பலவீனமடைந்திருந்தாலும் அதுவே திமுகவின் பிரதான அரசியல் எதிரி... துணை முதல்வர் உதயநிதி பேச்சு...

  • வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட 10,175 விருப்பமனுக்கள்... எடப்பாடி பழனிசாமி தங்களது தொகுதியில் போட்டியிட 2,187 விருப்பமனுக்கள் சமர்ப்பிப்பு..

  • வரும் 5ஆம் தேதி திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் ‘மோடி பொங்கல்' விழாவில் கலந்துகொள்கிறார் அமித் ஷா...

  • 2026 தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் கூட்டணி அமைச்சரவை உருவாக வாய்ப்புள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் கருத்து...

  • அரசு ஊழியர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் உச்சவரம்பிற்கு உட்பட்டு பொங்கல் போனஸ் அறிவிப்பு... 9.90 லட்சம் ஊழியர்களுக்கு மிகை ஊதியம் வழங்க 183.86 கோடி ரூபாய் ஒதுக்கீடு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com