தமிழ்நாடு
#Topnews | குடியுரிமை திருத்த மசோதா முதல் டி20 தொடரை வென்ற இந்தியா வரை
#Topnews | குடியுரிமை திருத்த மசோதா முதல் டி20 தொடரை வென்ற இந்தியா வரை
மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை மசோதா. மசோதாவுக்கு ஆதரவாக 125 வாக்குகளும் எதிராக 105 வாக்குகளும் பதிவு.
குடியுரிமை மசோதா நிறைவேறிய நாள் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நாள் என பிரதமர் மோடி பெருமிதம்.
மேயர் பதவி இடங்களுக்கான இடஒதுக்கீடு குறித்த அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் வன்முறை.
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர துணை ராணுவப்படை குவிப்பு - இணையதள சேவை துண்டிப்பு.
இன்று நடிகர் ரஜினிகாந்தின் 70ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம். இலவச திருமணங்கள், நலத்திட்ட உதவிகளுக்கு ரசிகர்கள் ஏற்பாடு.
மூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி. அதிரடியாக விளையாடி வெற்றிக்கு வழிகோலிய விராட் கோலி தொடர் நாயகனாக தேர்வு.