இன்றைய முக்கியச் செய்திகள்..!

இன்றைய முக்கியச் செய்திகள்..!

இன்றைய முக்கியச் செய்திகள்..!
Published on

இந்தியா, வங்கதேசம் இடையே இன்று முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து. பிரதமர் நரேந்திர மோடியுடன் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா இருதரப்பு பேச்சுவார்த்தை.

சகிப்பின்மை குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதிய மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு. சர்வாதிகார ஆட்சியை நோக்கி‌ நாடு செல்வதா‌க ராகுல் காந்தி கண்டனம்.

திருச்சி நகைக்கடை கொள்ளையில் கைது செய்யப்பட்ட மணிகண்டனிடம் தீவிர விசாரணை. கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட முருகன் உள்ளிட்ட 7 பேருக்கு வலைவீச்சு.

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை. அதிமுக எம்எல்ஏ இன்பதுரை தொடர்ந்த வழக்கில் உத்தரவு.

தமிழகத்தின் வட உள்மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு. வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணிப்பு.

நாங்குநேரியில் பரப்புரையை இன்று தொடங்குகிறார் மு.க.ஸ்டாலின். இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக முழு ஆதரவளிப்பதாக பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கருட சேவை கோலாகலம். லட்சக்கணக்கான பக்தர்கள் நேரில் கண்டு பக்திப் பரவசம்.

ரெப்போ வட்டி விகிதத்தை மேலும் கால் சதவிகிதம் குறைத்தது ரிசர்வ் வங்கி. வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் மேலும் குறைகிறது.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்கா சிறப்பான ஆட்டம். டீன் எல்கர், குயின்டன் டி காக் சதம் அடித்து அசத்தல்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com