தலைக்கு ஏறிய போதை -  வீட்டின் முன்பு அமர்ந்திருந்த பெண்கள் மீது காரை ஏற்றிய நபர்..!

தலைக்கு ஏறிய போதை - வீட்டின் முன்பு அமர்ந்திருந்த பெண்கள் மீது காரை ஏற்றிய நபர்..!

தலைக்கு ஏறிய போதை - வீட்டின் முன்பு அமர்ந்திருந்த பெண்கள் மீது காரை ஏற்றிய நபர்..!
Published on

தேனி அருகே குடிபோதையில் வீட்டின் முன் அமர்ந்திருந்த பெண்கள் மீது வாகனத்தை வேகமாக மோதி விபத்துக்குள்ளாக்கிய நபரால் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தேனி அருகேயுள்ள அரண்மனைப் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் லோக கிருஷ்ணன். இவர் உணவகம் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு மது அருந்திய கிருஷ்ணன் நண்பரை பார்க்கச் சென்றுள்ளார். அங்கிருந்து திரும்பிய கிருஷ்ணன் சாலையில் வாகனத்தை தாறுமாறாக ஓட்டி வந்ததாகச் சொல்லப்படுகிறது. அது கிராமப்புறம் என்பதால் அந்தப் பகுதியில் பெண்கள் சிலர் தங்கள் வீட்டின் முன்பு அமர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளனர்.


அந்த நேரத்தில் காரை வேகமாக ஓட்டி வந்தக் கிருஷ்ணன் காரை அவர்கள் மோதி விபத்துக்குள்ளாக்கியுள்ளார். இதில் அமர்ந்திருந்த பெண்கள் வாகனத்தின் அடியில் சிக்கி படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த பெண்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் இதில் ஜெயமணி என்ற மூதாட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் லோக கிருஷ்ணனை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com