\
தலைமை காவலர்
தலைமை காவலர்pt desk

ஈரோடு: மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு – விபரீத முடிவெடுத்த தலைமை காவலர்

தினந்தோறும் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக சத்தியமங்கலம் தலைமை காவலர் விபரீத முடிவெடுத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published on

செய்தியாளர்: சாம்ராஜ்

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் காவல்நிலையத்தில் தலைமை காவலராக வெங்கடேஷன் (50) என்பவர் பணியாற்றி வந்தார். இவருக்கு பிரபாவதி (40) என்ற மனைவியும், பிரிவிஷா (23), விவிஷா (21) என்ற இரு மகன்களும் உள்ளனர். வெங்கடேஷக்கும் அவரது மனைவி பிரபாவதிக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து கடந்த மாதம் கணவரிடம் கோபித்துக் கொண்டு தாய் வீட்டு சென்ற பிரபாவதி, சில நாட்களுக்கு முன்புதான் வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார்.

தலைமை காவலர்
ஜாமீன் கோரி மகா விஷ்ணு தாக்கல் செய்த மனு: காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

இந்நிலையில் நேற்றிரவு வெங்கடேஷ் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் தம்பதியர் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வெங்கடேஷ் விபரீத முடிவெடுத்துள்ளதாக சத்தியமங்கலம் போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து தலைமை காவலர் விபரீத முடிவெடுக்க, என்ன காரணம் என்ற கோணத்தில் சத்தியமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com