அரசுக்கு சொந்தமான கிடங்கில் பயங்கர தீ - 1000க்கும் மேற்பட்ட தொலைக்காட்சிகள் எரிந்து நாசம்

அரசுக்கு சொந்தமான கிடங்கில் பயங்கர தீ - 1000க்கும் மேற்பட்ட தொலைக்காட்சிகள் எரிந்து நாசம்
அரசுக்கு சொந்தமான கிடங்கில் பயங்கர தீ - 1000க்கும் மேற்பட்ட தொலைக்காட்சிகள் எரிந்து நாசம்

விழுப்புரத்தில் தமிழக அரசுக்கு சொந்தமான வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொலைக்காட்சி பெட்டிகள் எரிந்து சேதமடைந்தன‌. 

விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இலவச வண்ண தொலைக்காட்சிப் பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அறையில் இன்று அதிகாலை திடீரென தீ பரவியது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.‌ இருப்பினும், தொலைக்காட்சி பெட்டிகள் வெடித்து சிதறியதால் தீயை அணைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து பல மணி நேர போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ‌6 ஆண்டுகளுக்கு தொலைக்காட்சிகள் வைக்கப்பட்டுள்ள அந்த கிடங்கில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com