‘காசி டாக்கீஸ்’ பெயரை பயன்படுத்தலாம் - உயர்நீதிமன்றம் உத்தரவு

‘காசி டாக்கீஸ்’ பெயரை பயன்படுத்தலாம் - உயர்நீதிமன்றம் உத்தரவு
‘காசி டாக்கீஸ்’ பெயரை பயன்படுத்தலாம் - உயர்நீதிமன்றம் உத்தரவு

‘காசி டாக்கீஸ்’ என்ற பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், பெயரை பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சென்னை ஜாபர்கான் பேட்டையில் உள்ள காசி திரையரங்கத்தின் பின்புறத்தில் உள்ள சாலையில் ‘காசி டாக்கீஸ்’ என்ற புதிய திரையரங்கம் கடந்த ஜூலை 2018ஆம் தொடங்கப்பட்டது. இந்த பெயரை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காசி திரையரங்கின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 8 மாதங்களாக நடைபெற்று வந்த இவ்வழக்கில், தற்போது நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, காசி டாக்கீஸ் பெயரை பயன்படுத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அத்துடன் வழக்கு மேல்முறையீடு செல்லும்போது, உரிய ஆவணங்களை காசி டாக்கீஸ் உரிமையாளர் சமர்பித்தால் அவர் பெயரை நிரந்தரமாக பயன்படுத்தலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

முன்னதாக, கடந்த 1958ஆம் ஆண்டு ஜாபர்கான் பேட்டையில் காசி நாடார் 23.40 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார். அந்த இடத்தில் குடியிருப்பு வளாகங்கள் என பலவற்றை கட்டியுள்ளார். அவர் இறந்த பின்னர், அவரது நினைவாக 1984ஆம் ஆண்டு காசி திரையரங்கை அவரது மகன் கட்டியுள்ளார். பின்னர் அதனை 2002ஆம் ஆண்டு பால்சன் எண்டர்பிரைசர்ஸ் நிறுவனத்திடம் விற்றுள்ளார். அதன்பின்னர் பலமுறை அவர் காசி திரையரங்கம் என்ற பெயரை மாற்றுமாறு பால்சன் நிறுவனத்திடம் அறிவுறுத்தியுள்ளார். ஆனால் அவர்கள் பெயரை மாற்றாமல் வணிகச்சின்ன சட்டத்தில் பதிவுசெய்துள்ளனர். இதன்பின்னர் காசி டாக்கீஸ் திறக்கப்பட்டதால் இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com