மதுரையில் தேர்தல் தேதியை மாற்ற இயலுமா? உயர்நீதிமன்றம் கேள்வி

மதுரையில் தேர்தல் தேதியை மாற்ற இயலுமா? உயர்நீதிமன்றம் கேள்வி

மதுரையில் தேர்தல் தேதியை மாற்ற இயலுமா? உயர்நீதிமன்றம் கேள்வி
Published on

மதுரையில், தேர்தலை வேறு தேதிக்கு மாற்ற முடியுமா என்று உயர்நீதிமன்ற மதுரை தேர்தல் தேர்தல் ஆணையத்திடம் கேட்டுள்ளது. 

மதுரை மீனாட்சி அம்மன் கோவில், சித்திரை திருவிழா வருடம் தோறும் ஏப்ரல் மாதம் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா ஏப்ரல் 8- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 19- ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் தேரோட்டம் மற்றும் கள்ளழகர் எதிர்சேவை ஏப்ரல் 18- ஆம் தேதி நடக்கிறது. அன்றுதான் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவும் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைபெற உள்ளது. தேரோட்டம் முடிந்த மறுநாள் 19- ஆம் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் சுமார் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள் என்பதால், அன்றைய தினம் வாக்களிப்பதற்கு சிரமம் ஏற்படும். எனவே வாக்குப்பதிவு தேதியை மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பார்த்தசாரதி என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார். காவல்துறையினரும் அன்றைய தினம் போதுமான பாதுகாப்பை வழங்க இயலாது என்றும் தேர்தல் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர். இந்த வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தரம் ஆகியோர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மாவட்ட தேர்தல் ஆணையர், மற்றும் காவல்துறையிடம் சரியான விளக்கம் பெற்றுள்ளோம். தேர்தல் அன்று பாதுகாப்பு வழங்க முடியும் காவல்துறை தெரிவித்திருப்பதாகச் சொன்னார்.


 
’’தேர்தலை பொறுத்தவரை வாக்காளர்களே முக்கியமானவர்கள். திருவிழா நேரத்தில் நகருக்குள் நுழைவதே சிரமமான ஒன்று. அப்படியிருக் கும்போது வாக்காளர்கள் எப்படி வாக்குசாவடிக்கு செல்வார்கள்? நூறு சதவிகிதம் வாக்குப்பதிவு என்பதே தேர்தல் ஆணையத்தின் நோக்கமாக இருக்கும்போது, இதில் ஏன் ஆர்வம் காட்டவில்லை? இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் கருத்தில் கொள்ளாதது துரதிர்ஷ்டமானது. மதுரை யை  பொறுத்தவரை தேர்தல் தேதியை மாற்றி வைக்க முடியுமா? என்று தலைமை தேர்தல் ஆணையத்திடம் கேட்டு விளக்கம் அளிக்க வேண் டும்’’ என்று கூறிய நீதிபதிகள், வரும் 14 ஆம் தேதிக்கு வழக்கை தள்ளி வைத்தனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com