தினகரன் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் மீதான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக நாஞ்சில் சம்பத் தாக்கல் செய்த மனுவில், காவல்துறையினர் தனக்கெதிராக பதிவு செய்த வழக்குகளை ரத்துசெய்ய உத்தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளார். இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நாஞ்சில் சம்பத் மீதான வழக்குகளை விசாரிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்ட நீதிபதி வழக்கின் விசாரணையை அக்டோபர் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

