சென்னை: குழந்தை பெறுவதில் சிக்கல்! மருத்துவர்களை அணுகாமல் விபரீத முடிவெடுத்த இளம் தம்பதி

சென்னை: குழந்தை பெறுவதில் சிக்கல்! மருத்துவர்களை அணுகாமல் விபரீத முடிவெடுத்த இளம் தம்பதி
சென்னை: குழந்தை பெறுவதில் சிக்கல்! மருத்துவர்களை அணுகாமல் விபரீத முடிவெடுத்த இளம் தம்பதி

குழந்தை பிறக்காது என்ற மன உளைச்சலில் மருத்துவர்களை அணுகாமல் மதுரவாயல் பகுதியில் வசித்து வந்த இளம் தம்பதியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 22 வயதேயான சக்திவேல். மதுரவாயல் அடுத்த தனலட்சுமி நகர் பகுதியில் தங்கி பழைய பாத்திரங்களை வாங்கி விற்கும் கடை நடத்தி வந்தார். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் ஆர்த்தி என்ற பெண்ணுடன் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த நிலையில் இருவரும் மதுரவாயலில் வசித்து வந்தனர்.

இன்று காலை இவரது உறவினர்கள் செல்போனில் அழைத்தபோது கணவன், மனைவி இருவரும் செல்போனை எடுக்கவில்லை. அவர்கள் நடத்தி வந்த கடையும் திறக்கவில்லை. வீட்டின் கதவும் நீண்ட நேரமாக திறக்காமல் இருந்ததால் உறவினர்கள் சந்தேகமடைந்தனர். கதவை தட்டியும் திறக்காததால் மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மதுரவாயல் போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கணவன், மனைவி இருவரும் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மதுரவாயல் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

தற்கொலைக்கு முன்னர் அவர்கள் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அதில் "எனது ஆண்குறியின் நரம்பு உடைந்து போனதால் என்னால் குழந்தை பெற இயலாத காரணத்தால் நாங்களே எங்கள் சாவை செய்கிறோம். இதில் யாருக்கும் எந்த சம்மதமும் இல்லை" என எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

மருத்துவமனையை ஏதும் அணுகாமல் இருந்து வந்ததாகவும் தங்களுக்கு குழந்தை பிறக்காது என தாங்களே முடிவு செய்தும் மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

தமிழக அரசு இலவச மருத்துவ ஆலோசனை சேவைக்கு 104

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com