\
கொலைக் குற்றவாளி தஷ்வந்த் நீதிமன்றத்தில் ஆஜர்

கொலைக் குற்றவாளி தஷ்வந்த் நீதிமன்றத்தில் ஆஜர்

கொலைக் குற்றவாளி தஷ்வந்த் நீதிமன்றத்தில் ஆஜர்
Published on

சிறு‌மி ஹாசினி‌ கொலை குற்றவாளி தஷ்வந்த்தை செங்கல்பட்டு நீதிமன்‌றத்தில் இன்று காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்.

ஹாசினி எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் தஷ்வந்த் ஆஜராகாதால், அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் உத்தவிட்டிருந்தார். இதற்கிடையே தாயை கொன்று தலைமறைவாக இருந்த தஷ்வந்த் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, கடந்த 18 ஆம்தேதி செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் தஷ்வந்த் மாங்காடு போலீசாரால் ஆஜர்படுத்தப்பட்டார். 

அப்போது வழக்கை விசாரித்த நீதிமன்றம் மறுவிசாரணைக்கு இன்று ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தஷ்வந்த்தை இன்று நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் மாங்காடு போலீசார் ஆஜர் படுத்தின‌ர். இந்நிலையில் தஷ்வந்தை மீண்டும் வரும் 26ஆம் தேதி ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த முறை தஷ்வந்த் ஆஜர்படுத்தப்பட்டபோது நீதிமன்ற வளாகத்தில் மகளிர் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் தாக்குதல் நடத்தியதால், இந்தமுறை பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com