ட்விட்டரில் ஹேஷ்டேக் மோதல் - ட்ரெண்டிங்கில் 'We stand with Stalin'

ட்விட்டரில் ஹேஷ்டேக் மோதல் - ட்ரெண்டிங்கில் 'We stand with Stalin'
ட்விட்டரில் ஹேஷ்டேக் மோதல் -  ட்ரெண்டிங்கில் 'We stand with Stalin'

கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வரும் நேரத்தில் ட்ரெண்டான Go back Stalin ஹேஷ்டேக்கை பின்னுக்கு தள்ளி #We stand with Stalin ஹேஷ்டேக் முதலிடத்திற்கு வந்தது.

ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், தொடர்ந்து கோவை நகரிலும் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். அங்கு சென்ற அவர் கொரோனா பாதுகாப்பு உடை அணிந்து கொரோனா வார்டிற்குள் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது.

கோவைக்கு முதல்வர் வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து  ட்விட்டரில் #go back Stalin என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடத்தில் வந்தது. கோவையில் படுக்கைகள், ஆக்சிஜன், தடுப்பூசி இல்லாததை சுட்டிக்காட்டி ஹேஷ்டேக் டிரண்டானது.

இந்த நிலையில் இதற்கு பதிலாக திமுகவினர் we stand with Stalin என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் go back Stalin ஐ பின்னுக்கு தள்ளி முதலிடம் வந்தது.

முன்னதாக, கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றியதால், திமுக வஞ்சிப்பதாகவும், அதனால் தான் கொரோனா கோவையில் அதிகரித்து வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com