மதுரை ஆதீன மடத்தின் 293-வது பீடாதிபதியாக ஹரிஹர தேசிகர் - 23ஆம் தேதி பட்டமேற்பு

மதுரை ஆதீன மடத்தின் 293-வது பீடாதிபதியாக ஹரிஹர தேசிகர் - 23ஆம் தேதி பட்டமேற்பு
மதுரை ஆதீன மடத்தின் 293-வது பீடாதிபதியாக ஹரிஹர தேசிகர் - 23ஆம் தேதி பட்டமேற்பு

293 வது மதுரை ஆதீன மடத்தின் பீடாதிபதியாக ஹரிஹர தேசிகர் 23 ஆம் தேதி முறைப்படி பட்டமேற்க உள்ளார். அன்றைய தினமே மறைந்த ஆதீனத்திற்கு குருபூஜை விழா நடைபெறும் என மதுரை ஆதீன மடத்தின் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரை ஆதீனத்தின் 292-வது பீடாதிபதியாக இருந்த அருணகிரிநாதர் உடல்நலக் குறைவு காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 13 ஆம் தேதி காலமானார்.

இதனையடுத்து மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக இருந்த மதுரை ஆதீன மடத்தின் 293 மடாதிபதியாக ஹரிஹர தேசிகரை நியமனத்திற்கான ஆச்சார்யா அபிஷேகத்தினை தருமபுர ஆதீனம் முன்நின்று நடத்தி வைத்தார். இதனைத் தொடர்ந்து தீட்ஷை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

293-வது ஆதீன நியமனத்திற்கான சம்பராதாயங்கள் ஏற்கெனவே முடிவுற்ற நிலையில், 10நாட்கள் தொடர்ந்து குருபூஜை நடத்தப்பட்ட பின்னர் பீடோகரனம் என்னும் பீடத்தில் அமரும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

இதனிடையே உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவர் ஆசி வழங்கும் அறைக்கு சீல் வைக்கப்பட்டிருந்தது. அவரது மறைவிற்கு பிறகு 293 வது புதிய ஆதீனம் முன்னிலையில் சீல் வைக்கப்பட்ட அறை திறக்கப்பட்டது. மேலும் மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான சொத்து விவரங்கள், நகை விவரங்கள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கடந்த சில தினங்களாக மதுரை ஆதீனத்தின் புதிய இளவரசாக பொறுப்பேற்றுள்ள ஹரிஹர தேசிகர் வழக்கம் போல் பூஜைகள் செய்வதோடு பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார்.

இந்நிலையில் மறைந்த மதுரை ஆதீனம் அருணகிரிநாதருக்கு வரும் 23 ஆம் தேதி குருபூஜை விழா நடைபெறும். 39 ஆண்டுகள் பல்வேறு ஆதீனங்களில் தொண்டாற்றிய 292 வது மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட மதுரை முனிச்சாலையில் குருபூஜை விழா நடைபெறும். அன்றைய தினமே 293 வது ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் பட்டம் சூட்டும் விழா நடைபெற உள்ளதாகவும் ஆதீன மடத்தின் சார்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com