காலேஜ் டி20 கிரிக்கெட் போட்டி - ஹர்பஜன் சிங் துவக்கி வைத்தார்
சென்னை பவித் சிங் நாயர் நினைவு கோப்பை கிரிக்கெட் தொடரை இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஹர்பஜன் சிங் துவக்கி வைத்தார்.
சென்னை குருநானக் கல்லூரியில் தென்னிந்திய அளவிலான பவித் சிங் நாயர் நினைவு கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று துவங்கி வருகின்ற 7 ம் தேதி வரை நடைபெறுகிறது. ஹைதராபாத், பாண்டிச்சேரி, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இருந்து 14 கல்லூரிகள் தொடரில் கலந்து கொள்கிறது. பெண்களும் கலந்து கொண்டு விளையாடும் இத்தொடரில், 6 அணிகள் மோதிக் கொள்ள உள்ளன. போட்டிகளில் சிறந்த ஆட்டக்காரர், சிறந்த பந்து வீச்சாளர் ஆகியோருக்கு பரிசும், தொடர் ஆட்ட நாயகருக்கு இருசக்கர வாகனமும் வழங்கபடும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தொடரின் வெற்றி அணிக்கு கோப்பையுடன் 20000 ரூபாய் ரொக்கபரிசும், இரண்டாம் இடம் பிடிப்பவருக்கு கோப்பையுடன் 10000 ரூபாய் ரொக்கமும் வழங்கப்படும். போட்டிகள் குருநானக் கல்லூரியிலும், ஐஐடி திடலிலும் நடைபெறுகிறது.