இன்று சர்வதேச ஆண்கள் தினம்

இன்று சர்வதேச ஆண்கள் தினம்

இன்று சர்வதேச ஆண்கள் தினம்
Published on

ஆண்டுதோறும் நவம்பர் 19-ந் தேதி சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

உலகில் ஆண்களைக் கெளரவப்படுத்தவும், ஆண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வு கருதியும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. மகத்தான தியாகங்கள் பல புரிந்து வரும் ஆண்குலத்தின் பெருமையை சமுதாயம் அங்கீகரிக்க இந்த நாள் ஒரு நினைவுபடுத்தும் நாளாகவும் அமைகிறது.

“ஆண்களுக்கென்று ஏன் ஒரு தனியான நாள் கொண்டாடப்பட வேண்டும்?” அவர்களுக்கு வாழ்நாளில் என்னதான் பிரச்னை உண்டு என சிலர் கேள்வி கேட்கின்றனர். ஆனால் உண்மை அப்படியல்ல. ஆணுக்கும் பிரச்னைகள் உண்டு. அவனுக்கும் தீமைகள் இழைக்கப்படுகின்றன. ஆணுக்கும் பாலியல் தொந்தரவு உள்ளது என்பதை நம் சமூகம் நிச்சயம் உணர வேண்டும். அவனின் பாதுகாப்பிற்காகவும், உரிமைக்காகவும் நிச்சயம் ஒருநாள் கடைபிடிக்கப்பட வேண்டும். அதுவே இன்றைய நாள். அனைத்து ஆண்களுக்கும் ஆண்கள் தின நல்வாழ்த்துகள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com