வருங்கால இந்தியாவே குழந்தைகள்தான்.. இன்று குழந்தைகள் தினம்..!

வருங்கால இந்தியாவே குழந்தைகள்தான்.. இன்று குழந்தைகள் தினம்..!

வருங்கால இந்தியாவே குழந்தைகள்தான்.. இன்று குழந்தைகள் தினம்..!
Published on

முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14-ம் தேதி அதாவது இன்று இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

குடும்பத்தில் ஒரு குழந்தை பிறந்துவிட்டாலே போதும் வீட்டில் உள்ள சண்டை சச்சரவுகள் எல்லாம் ஒதுங்கி வீடே மகிழ்ச்சியில் திளைக்கும். பின் குழந்தைகள் வளர்கின்ற ஒவ்வொரு நாளுமே வீட்டில் உள்ள அனைவருக்கும் கொண்டாட்டம் தான். என் மகன் இப்போது தவழ பழகிவிட்டான். நடக்க பழகிவிட்டான். பேச பழகிவிட்டான் என ஒவ்வொரு பெற்றோரையும் அவர்களின் குழந்தைகள் சொர்க்கத்தில் இருப்பதாகவே உணர வைக்கிறார்கள். பெற்றோர்களும் குழந்தைகளுக்காகவே வாழ்க்கின்றனர். இத்தகைய குழந்தைகள் பெற்றோர்களுக்கு மட்டுமல்ல நாட்டிற்கே வருங்கால தூண்கள். இன்றைய குழந்தைகள் தான் நாளைய விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள், அறிவியல் மேதைகள் என பலதுறைகளில் சாதனை படைக்கவுள்ளனர். குழந்தைகளுக்கு என்ன தெரியும் அவர்கள் குழந்தைகள் தான். நம்மிடம் இருந்துதான் அனைத்தையும் கற்றுக்கொள்கின்றனர்.  எனவே ஒவ்வொரு குழந்தைகளுக்கும் அன்பையும், பண்பையும் நாம் தான் கற்றுத்தர வேண்டும். ஆண், பெண் பாகுபாடின்றி குழந்தைகளை சமமாக வளர்க்க வேண்டும். இதன் மூலம் வருகின்ற சமுதாயத்தில் இன்னும் ஓரளவிற்கு பாகுபாடுகள் குறையும். எனவே குழந்தைகளை மன ஆரோக்கியமாகவும், உடல் ஆரோக்கியமாவும் வளர்ப்பது நம் ஒவ்வொருக்கும் உள்ள பொறுப்பு.

குழந்தைகள் தான் நாட்டின் வருங்கால தூண்கள் என்பதை முன்னாள் பிரதமர் நேரு உள்ளார்ந்து உணர்ந்திருந்தார். அதுவே குழந்தைககள் மீது அவர் பாசமாக இருக்க முக்கிய காரணம். குழந்தைகளும் நேரு மீது தீராத பற்று கொண்டிருந்தனர். எப்போதும் அவரை ' நேரு மாமா', 'நேரு மாமா' என்றுதான் அழைப்பார்கள். நேரு குழந்தைகள் மீது கொண்டிருந்த அன்பை பாராட்டும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நேரு பிறந்த நாளான நவம்பர் 14-ம் தேதி தேசிய குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. மற்ற நாட்களை விட இந்த நாட்கள் குழந்தைகளுக்கு ரொம்பவே ஸ்பெஷல். வீட்டில் பெற்றோர்கள் வாழ்த்து தெரிவிப்பார்கள். அதேபோல் பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு வாழ்த்து கிடைக்கும். இன்று குழந்தைகள் செய்யும் சிறிய, சிறிய தவறுகளுக்கு கூட தண்டனை இருக்காது. எனவே இன்றைய நாள் எல்லா குழந்தைகளுக்கும் மகிழ்ச்சியான நாள்தான். அனைத்து குழந்தைகளுக்கும் இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com