துர்கா ஸ்டாலின்pt desk
தமிழ்நாடு
அனுமன் ஜெயந்தி விழா - சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்!
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் தமிழக முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார்.
செய்தியாளர்: நவ்பல் அஹமது
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தாணுமாலய சுவாமி கோயிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று தமிழக முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் கோயிலுக்கு வருகை புரிந்தார்.
துர்கா ஸ்டாலின்pt desk
இதையடுத்து அவர் தட்சிணாமூர்த்தி, சிவன், பிரம்மா, விஷ்ணு, மும்மூர்த்திகளையும் வழிபட்டார். அடுத்து மூலவரான தாணுமாலையன் சுவாமிக்கு வெற்றிலை, பாக்கு, பழங்கள், பூ போன்ற பூஜை பொருட்களை காணிக்கையாக செலுத்தி வழிபட்டார்.
அதனைத் தொடர்ந்து விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு ஆளுயர வெற்றிலை மாலை, துளசி மாலை சார்த்தி வழிபட்டார். முன்னதாக கோயிலுக்கு வந்த அவரை கோயில் மேலாளர் உட்பட அதிகாரிகள் வரவேற்று அழைத்துச் சென்றனர்.