வீல்சேருக்கு கட்டணம் வசூல் - பேருந்தை சிறைப்பிடித்த மாற்றுத்திறனாளிகள்

வீல்சேருக்கு கட்டணம் வசூல் - பேருந்தை சிறைப்பிடித்த மாற்றுத்திறனாளிகள்

வீல்சேருக்கு கட்டணம் வசூல் - பேருந்தை சிறைப்பிடித்த மாற்றுத்திறனாளிகள்
Published on

பழனி பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் அரசு பேருந்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பொள்ளாச்சியில் இருந்து மதுரைக்கு மாற்றுத்திறனாளியான வெங்கடேஷ் என்பவர் அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். இந்த பயணத்தின்போது அவர் பயன்படுத்திய வீல்சேருக்கு நடத்துனர் கட்டணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து தனது சகாக்களிடம் வெங்கடேஷ் கூறியுள்ளார்.  கட்டணம் வசூல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மாற்றுத்திறனாளிகள் ஒன்று சேர்ந்து குறிப்பிட்ட அந்த அரசுப்பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 
மாற்றுத்திறாளிகளுக்கு தமிழக அரசு வழங்கிய சலுகைகள் குறித்த அரசாணையை போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்காததால் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுவதாக பாதிக்கப்பட்டவர் குற்றம்சாட்டினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com