\
பள்ளியில்‌ அரையாண்டு தேர்வு வினாத்தா‌ள்கள் திருட்டு

பள்ளியில்‌ அரையாண்டு தேர்வு வினாத்தா‌ள்கள் திருட்டு

பள்ளியில்‌ அரையாண்டு தேர்வு வினாத்தா‌ள்கள் திருட்டு
Published on

சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில், அரையாண்டு தேர்வுக்கான வினாத்தாள்கள் திருடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. அங்கு தமிழ் முதல் தாள், தமிழ் இரண்டாம் தாள், ஆங்கிலம் முதல் தாள், ஆங்கிலம் இரண்டாம் தாள் ஆகியவற்றுக்கான வினாத்தாள் பண்டல்கள் அலுவலகத்தின் தனி அறையில் ‌வழக்கம்போல் வைக்கப்பட்டு இருந்துள்ளன.

பள்ளியின் நேரம் முடிவடைந்ததையடுத்து வழக்கம்போல் பூட்டப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று அப்பள்ளியின் தலைமையாசிரியர் வெங்கடாச்சலம் பள்ளிக்கு வந்துள்ளார். 

அப்போது அலுவலகத்தின் தனியறையில் இருந்த பீரோவை உடைத்து வினாத்தாள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். பின்னர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com