ஹெச்.ராஜா Vs கார்த்தி சிதம்பரம் - ஒரு நேரடிப் பேட்டி

ஹெச்.ராஜா Vs கார்த்தி சிதம்பரம் - ஒரு நேரடிப் பேட்டி

ஹெச்.ராஜா Vs கார்த்தி சிதம்பரம் - ஒரு நேரடிப் பேட்டி
Published on

சிவகங்கை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ஹெச்.ராஜா மற்றும் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கார்த்தி சிதம்பரம் புதிய தலைமுறைக்கு சிறப்பு பேட்டியளித்துள்ளனர்.

கார்த்தி சிதம்பரம் கூறும்போது, “காங்கிரஸ் தேர்தல் அறிக்கை என்பது அடித்தட்டு மக்களுக்கு பயனளிக்கும் வகையில் உள்ளது. வேலை வாய்ப்பு, விவசாயம், மகளிர் பாதுகாப்பு மூன்றையும் கொண்டு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. பாஜக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. 

மோடி சொன்னதுபோல் ரூ.15 லட்சம் யார் வங்கிக் கணக்கிலும் செலுத்தப்படவில்லை. ஜிஎஸ்டி சிந்தித்தது நாங்கள், ஆனால் அதை பாஜக குழப்பி சொதப்பிவிட்டார்கள். இலங்கைப் படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்துவதில் எனக்கு தனிப்பட்ட வகையில் எந்த ஆட்சேபனையும் இல்லை. இலங்கை தமிழர்களின் பிரச்னையில் நான் விடுதலைப் புலிகளை மையப்படுத்தி பார்க்கவில்லை. ராஜீவ் கொலை வழக்கை சட்டப்படியே பார்க்க வேண்டும். உணர்ச்சிப் பூர்வமாக பார்க்கக்கூடாது. கலைஞர் வைத்த கூட்டணியைப் போல ஸ்டாலின் தற்போது கூட்டணி வைத்துள்ளார். அதனால் 2004 போலவே திமுக கூட்டணி பெரும் வெற்றி பெரும்” என்று தெரிவித்தார்.

ஹெச்.ராஜா பேசும்போது, “காங்கிரஸின் தேர்தல் அறிக்கை தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக தயாரிக்கப்பட்டுள்ளதே தவிர, அதில் எதிர்கால திட்டம் எதுவுமில்லை. மானியங்களை நேரடியாக கொடுப்பதற்காக நாங்கள் 33 கோடி ஏழைகளுக்கு வங்கிக் கணக்கை தொடங்கினோம். கார்ப்ரேட்களுக்கு கடன்கொடுத்ததும், கடனை தள்ளுபடி செய்ததும் காங்கிரஸ் தான். 

பாஜக அரசு 3 லட்சத்திற்கும் மேலான கோடி கடனை கார்பரேட்களிடமிருந்து வசூலித்துள்ளது. நிதிநிலையும் பாஜக தான் உயர்த்தியுள்ளது. ஆனால் காங்கிரஸ் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான காரணிகளை ஏற்படுத்தாமல் தேர்தலில் வாக்குகளை கவர மட்டுமே அறிவிப்புகளை வெளியிடுகிறது. நீட் தேர்வுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வாதாடியவரே சிதம்பரத்தின் மனைவிதான். ஜிஎஸ்டி-க்கு கீழ் உள்ள அனைத்து விலை நிர்ணயங்களும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகளின் ஆலோசனைகளை கேட்ட பின்னரே தீர்மானிக்கப்பட்டது” என்றார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com