“ப.சிதம்பரத்திற்கு அடுத்து...” - ஹெச்.ராஜா சூசகம்
ப.சிதம்பரத்திற்கு அடுத்து கார்த்தி கைது என்பது போல பாஜகவின் ஹெச்.ராஜா மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் கடந்த 22 ஆம் தேதி உத்தரவிட்டது. விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்றும், வெளிநாடு செல்லக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளதால் அவரால் சிறையில் இருந்து தற்போது வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ப.சிதம்பரத்தை நவம்பர் 13-ஆம் தேதி நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ப.சிதம்பரத்திற்கு அடுத்து கார்த்தி கைது என்பது போல பாஜகவின் ஹெச்.ராஜா மறைமுகமாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், “ஐ(ப்) "பசி"க்கு அடுத்தது "கார்த்தி"(க்)கை (து) தானே!.. #யாரோ #என்னமோ” எனத் தெரிவித்துள்ளார்.

