\
அனுமதித்தால் யாத்திரை; இல்லையேல் போராட்டம் - ஹெச்.ராஜா

அனுமதித்தால் யாத்திரை; இல்லையேல் போராட்டம் - ஹெச்.ராஜா

அனுமதித்தால் யாத்திரை; இல்லையேல் போராட்டம் - ஹெச்.ராஜா
Published on: 

தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தலைமையில் தமிழகத்தில் இன்று முதல் டிசம்பர் 6-ந் தேதி வரை வேல் யாத்திரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில் கடவுளை வழிபட திருத்தணிக்கு செல்வதாக எல். முருகன் தெரிவித்தார்.

இதனிடையே வேல் யாத்திரை குறித்து பாஜகவை சேர்ந்த ஹெச்.ராஜா கூறுகையில், ''காவல்துறை அனுமதித்தால் பாஜக வேல் யாத்திரையை நடத்தும்; இல்லையெனில் போராட்டம். இந்துக்களை இகழ்வாக பேசும் ஸ்டாலின் போன்றவர்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தவே வேல்யாத்திரை'' என்று அவர் தெரிவித்தார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com