தமிழ்நாடு
பேஸ்புக் அட்மினை நீக்கிவிட்டேன்: ஹெச்.ராஜா விளக்கம்
பேஸ்புக் அட்மினை நீக்கிவிட்டேன்: ஹெச்.ராஜா விளக்கம்
சிலை உடைப்பு தொடர்பாக எனக்கு தெரியாமல் என் முகப்புத்தகத்தில் கருத்துப் பதிவிட்ட எனது நிர்வாகியை நீக்கிவிட்டேன் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா கூறினார்.
டெல்லியில் செய்தியாளர்களை இன்று சந்தித்த ஹெச்.ராஜா, கூறும்போது, ’நான் டெல்லிக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்தேன். அப்போது பெரியார் சிலை தொடர்பான பதிவை எனது அட்மின் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார். விமானத்தில் வந்து டெல்லியில் இறங்கியதும்தான் இது எனக்குத் தெரியவந்தது. உடனடியாக அந்தப் பதிவை நீக்கிவிட்டேன். சிலைகளை உடைப்பது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. அட்மின் எனக்கு தெரியாமல் பண்ணியிருந்தால் கூட, எனது முகநூலில் வெளியானது என்பதால் அதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். எனது சமூகவலைத்தள நிர்வாகியையும் நீக்கிவிட்டேன்’ என்றார்.