நெல்லை கண்ணனை கைது செய்யாவிட்டால் மெரினாவில் நாளை தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நெல்லையில் நடைபெற்ற போராட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு எதிராக நெல்லை கண்ணன் பேசியதாக பல்வேறு காவல்நிலையங்களில் பாஜகவினர் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீசாரும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தன்னுடைய ட்விட்டரில், “நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி நாளை (1.1.2020) மாலை 3.00 மணிக்கு மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே இல.கணேசன், பொன் ராதாகிருஷ்ணன், சிபி.ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் நானும் தர்ணாப் போராட்டம் மேற்கொள்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.