\
போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த உள்ளேன்:  ஹெச்.ராஜா

போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த உள்ளேன்: ஹெச்.ராஜா

போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த உள்ளேன்: ஹெச்.ராஜா
Published on

நெடுவாசலில் போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த உள்ளேன் என பாஜகவின் தேசியச் செயலர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீட் தேர்வை எதிர்கொண்டால் இந்திய அளவிலான தேர்வுகளை எதிர்கொள்ளும் திறனை தமிழக மாணவர்கள் வளர்த்துக்கொள்வார்கள்.பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று கேட்டுவந்த தமிழக அரசு விலையை உயர்த்தியுள்ளதை வைத்து தமிழக அரசின் நடவடிக்கை எவ்வாறு சீர் கெட்டுள்ளது என்பதை காட்டுகிறது. மாநில அரசு நடத்தும் பள்ளிகளின் மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை என்றார்.

ஹைரோ கார்பன் என்பது பசுமை எரிவாயு என்பதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லை, விவசாய நிலங்களுக்கு பாதிப்பிலை என்பதுதான் உண்மை. இருப்பினும் மக்கள் போராடி வருவதால் மக்களை பாதிக்கும் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தாது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசும் இதனை தெரிவித்துள்ள நிலையில் நெடுவாசலில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படுவது ஏன் என கேள்வி எழுப்பினார். மேலும், நெடுவாசல் போராட்டக் கார்ர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த இன்று செல்கிறேன் என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com