போராட்டத்தில் நாம் செய்ய வேண்டியவை இதுதான்..! ஜி.வி.பிரகாஷ் அதிரடி

போராட்டத்தில் நாம் செய்ய வேண்டியவை இதுதான்..! ஜி.வி.பிரகாஷ் அதிரடி

போராட்டத்தில் நாம் செய்ய வேண்டியவை இதுதான்..! ஜி.வி.பிரகாஷ் அதிரடி
Published on

காவிரி மேலாண்மை வாரியத்திற்காக போராடும் நாம், போராட்டத்தில் சில விஷயங்களை முன்னிறுத்துவோம் என குறிப்பிட்டு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அளித்த கெடு மார்ச் 29-ம் தேதியுடன் முடிந்தும், மத்திய அரசு இன்னும் ஆணையத்தை அமைக்கவில்லை. இதனையடுத்து மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடுத்தது. இதனிடையே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக்கோரி பல கட்சிகளும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்திற்காக போராடும் நாம், போராட்டத்தில் சில விஷயங்களை முன்னிறுத்துவோம் என குறிப்பிட்டு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ காவிரி மேலாண்மைக்கு நாம் போராடும்போது இந்த கோரிக்கையை முன்னிறுத்துவோம். காவிரி மற்றும் டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். பெட்ரோல் எடுக்கும் பகுதிகளை பாதுகாக்கும் நாம் ஏன் உண்ணும் உணவிற்காக விவசாயத்திற்கு அதை செய்யக்கூடாது. அப்படி அறிவிக்கும் பட்சத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் மணல் கொள்ளை, ஹைட்ரோகார்பன், ஆலை விதிமீறல் போன்ற எதையும் செய்ய முடியாது” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com