”காண்போர் நெஞ்சம் கலங்கி பதறுகிறது; நியாப்படுத்த முடியாத பெருங்குற்றம்” - ஜி.வி.பிரகாஷ் காட்டம்!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் என்பது நியாப்படுத்த முடியாத பெருங்குற்றம் என்று இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார்.
gv prakash
gv prakashpt

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் நேற்று நடைபெற்ற விஷச்சாராய சம்பவத்தில் இதுவரை 39 பேர் உயிரிழந்ததாகவும், 90 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் ஆண்களுடன் பெண்களும் மரணத்திருப்பதும், தாய்-தந்தை என இரண்டு பேரையும் இழந்துவிட்டு சிலர் கண்ணீர்வடிப்பதும் பார்ப்போரின் நெஞ்சத்தை ரணமாக்கியுள்ளன.

gv prakash
விஷச்சாராயம்: சிகிச்சை அளிக்காத மருத்துவர்கள்? தகவல் கிடைத்தும் கண்டுகொள்ளா காவல்துறை? என்ன நடந்தது?

நியாயப்படுத்த முடியாத பெருங்குற்றம்..

கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட கள்ளச்சாராய மரணங்கள் சம்பவம் தமிழகத்தை உலுக்கி இருப்பதோடு, ஒட்டுமொத்த இந்தியாவின் பேசுபொருளாகவும் மாறியுள்ளது. இந்நிலையில் எதிர்கட்சிகள் முதல் பலபேர் அரசையும், அரசின் நடவடிக்கையும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அந்தவகையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷும் தன்னுடைய ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். கள்ளச்சாராய மரணம் குறித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவர், “காண்போர் நெஞ்சம் கலங்கி பதறுகிறது . கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம். நியாப்படுத்த முடியாத பெருங்குற்றம். இழப்பீடுகள் எதையும் ஈடுகட்டாது , இனி மரணங்கள் நிகழாவண்ணம் தவறு செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்யும் வரை” என்று பதிவிட்டு ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

gv prakash
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள்: “அரசு நிர்வாகத்தின் அலட்சியமே காரணம்”- தவெக தலைவர் விஜய் கண்டனம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com