\
'உணர்ச்சிவசப்பட்டு விடாதீர்கள்': ஜி.வி.பிரகாஷ் வேண்டுகோள்

'உணர்ச்சிவசப்பட்டு விடாதீர்கள்': ஜி.வி.பிரகாஷ் வேண்டுகோள்

'உணர்ச்சிவசப்பட்டு விடாதீர்கள்': ஜி.வி.பிரகாஷ் வேண்டுகோள்
Published on: 

ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தை திசை திருப்பும் வகையில் உணர்ச்சிவசப்பட்டு எந்தச் செயலிலும் ஈடுபட வேண்டாம் என இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்காக தமிழகம் முழுவதும் இளைஞர்கள் அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இளைஞர்களின் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் ஆதரவினை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களுக்கு சமூகவலைதளங்கள் மூலம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்துள்ளார்.

அவர் தனது பதிவில், போராட்டம் நடத்தி வரும் இளைஞர்களின் நோக்கத்தினை திசை திருப்ப முயற்சிகள் நடந்து வருகிறது. அவர்கள் மத்தியில் உணர்ச்சி வசப்பட்டு எந்த ஒரு செயலிலும் இளைஞர்கள் ஈடுபட வேண்டாம். நமது நோக்கம் அறவழிப் போராட்டமே. அமைதியாக அமர்ந்தோ, நடந்தோ, கோஷமிட்டோ நம் உரிமையை மீட்டெடுக்க எதிர்ப்பை தெரிவிக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com