\
குட்கா விவகாரம்: வழக்குப்பதிவு செய்தது சிபிஐ

குட்கா விவகாரம்: வழக்குப்பதிவு செய்தது சிபிஐ

குட்கா விவகாரம்: வழக்குப்பதிவு செய்தது சிபிஐ
Published on

குட்கா விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

தமிழக அரசியலில் புயலைக் கிளப்பிய குட்கா ஊழல் வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் இருந்து சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. எனவே அதுதொடர்பான விசாரணையை சிபிஐ தொடங்கியது. இதனிடையே குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க தடை விதிக்கக்கோரி இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் சிவக்குமாரின் மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்கலாம் எனவும் தெரிவித்துவிட்டது.

இந்நிலையில் குட்கா விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. குட்கா விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com