குருபெயர்ச்சி: தமிழகத்தில் உள்ள பிரசித்திபெற்ற குருதலங்களில் சிறப்பு வழிபாடு

குருபெயர்ச்சி: தமிழகத்தில் உள்ள பிரசித்திபெற்ற குருதலங்களில் சிறப்பு வழிபாடு

குருபெயர்ச்சி: தமிழகத்தில் உள்ள பிரசித்திபெற்ற குருதலங்களில் சிறப்பு வழிபாடு
Published on

குருபெயர்ச்சியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஆலங்குடி மற்றும் திட்டை குருதலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு குருபகவான் பெயர்ச்சியாகும் நிகழ்வு மாலை 6.21 மணிக்கு நிகழ்ந்தது. இதைத் தொடர்ந்து குருவின் பரிகாரதலமான தஞ்சை மாவட்டம் திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில் உள்ள குருபகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. முன்னதாக குருபெயர்ச்சி யாகமும் வளர்த்து, பலவீனமாக உள்ள ராசியினருக்கு பரிகார பூஜைகள் நடத்தப்பட்டன. கொரோனா கட்டுப்பாடு காரணமாக சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் பங்கேற்க அனுமதியளிக்கப்படவில்லை. குரு பெயர்ச்சியானதும், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com