வீட்டின் மேற்கூரையை துளைத்துக்கொண்டு விழுந்த துப்பாக்கிக் குண்டு - சென்னையில் அதிர்ச்சி

வீட்டின் மேற்கூரையை துளைத்துக்கொண்டு விழுந்த துப்பாக்கிக் குண்டு - சென்னையில் அதிர்ச்சி
வீட்டின் மேற்கூரையை துளைத்துக்கொண்டு விழுந்த துப்பாக்கிக் குண்டு - சென்னையில் அதிர்ச்சி

ஆவடி அருகே வீட்டின் மேற்கூரையை உடைத்துக்கொண்டு துப்பாக்கி குண்டு பாய்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குண்டு எங்கிருந்து வந்த்து என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஆவடி அடுத்த மிட்டனமல்லி எம்.சி. ராஜா தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் குமார். பெயிண்டர் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு பணி முடித்து வந்து வீட்டில் உறங்கியுள்ளார். பின்னர் காலையில் எழுந்து பார்த்தபோது பீரோ கண்ணாடி உடைந்து சிமெண்ட் ஓடு துளை ஏற்பட்டு காணப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தனது வீட்டில் தேடி பார்த்துள்ளார். அப்போது அங்கு துப்பாக்கி குண்டு இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு எனக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து முத்தாபுதுப்பேட்டை காவல் ஆய்வாளர் ராஜி, தலைமைக் காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து துப்பாக்கிக் குண்டை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அருகில் சிஆர்பிஎஃப் பயிற்சி வளாகமும், இந்திய விமானப் படையும் இருப்பதால், அந்த மையங்களில் இருந்து பயிற்சி மேற்கொள்ளும்போது ஏதேனும் துப்பாக்கிக் குண்டுகள் வந்து விழுந்திருக்கலாம் எனவும் அல்லது வேறு யாரேனும் துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டு இங்கு வந்து விழுந்ததா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த குண்டு, 9 எம்.எம். குண்டு என் விசாரணயில் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com