சவுக்கு சங்கர் - சென்னை உயர் நீதிமன்றம்
சவுக்கு சங்கர் - சென்னை உயர் நீதிமன்றம்puthiya thalaimurai

சவுக்கு சங்கர் ஆட்கொணர்வு வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதிகள் விலகல் - காரணம் இதுதான்!

சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் தலைமையிலான அமர்வு அறிவித்துள்ளது.
Published on

செய்தியாளர்: V.M.சுப்பையா

பெண் போலீசாரை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூ டியூபர் சவுக்கு சங்கர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டாா. இதை எதிர்த்து அவரது தாய் கமலா தாக்கல் செய்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இடைக்கால ஜாமீன் வழங்கியதுடன், உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை விரைந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

Savukku shankar
Savukku shankarpt desk

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஏற்கனவே இந்த வழக்கை இந்த அமர்வு விசாரித்தது. அப்போது பதிலளிக்க காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பபட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுதரார் தாக்கல் செய்த மனுவில் நீதிமன்றம் (வழக்கை விசாரிக்கும் அமர்வு) குறித்து சில கருத்துகள் தெரிவிக்கபட்டுள்ளது.

சவுக்கு சங்கர் - சென்னை உயர் நீதிமன்றம்
நீதிமன்ற உத்தரவை மீறி இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள்-கோயம்பேடு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்!

இந்த நிலையில், மேலும் இந்த வழக்கை இந்த அமர்வு விசாரிக்க விரும்பவில்லை. விசாரிப்பது சரியாக இருக்காது. எனவே வேறு அமர்விற்கு மாற்ற பொறுப்பு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்வதாக உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com