எடுத்தவுடன் துப்பாக்கிச்சூட்டை அரங்கேற்றுவதா ?  துப்பாக்கிச்சூடு நடத்த விதிகள் என்னென்ன?

எடுத்தவுடன் துப்பாக்கிச்சூட்டை அரங்கேற்றுவதா ? துப்பாக்கிச்சூடு நடத்த விதிகள் என்னென்ன?

எடுத்தவுடன் துப்பாக்கிச்சூட்டை அரங்கேற்றுவதா ? துப்பாக்கிச்சூடு நடத்த விதிகள் என்னென்ன?
Published on

அனுமதியின்றி கூடியிருப்பவர்களை எப்படி கலைக்க வேண்டும் என்று தமிழ்நாடு காவல்நிலை ஆணைகள் பிரிவு 703-லும், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து கவாத்து மற்றும் பயிற்சி கையேடு பிரிவு 123-லும் பல்வேறு விதிகள் கூறப்பட்டுள்ளன.

அதன்படி, அனுமதியின்றி கூடுவது சட்டவிரோதம் என்பதால் கலைந்து செல்லும்படி போராட்டக்காரர்களை காவல்துறையினர் அறிவுறுத்த வேண்டும். அவ்வாறு கூறிய பின்னும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாவிட்டால், அவர்களை அப்புறப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும். அப்புறப்படுத்தும் முயற்சியில் முதற்கட்டமாக கண்ணீர் புகை குண்டை வீச வேண்டும். அடுத்ததாக லேசான தடியடியும், அதற்குபிறகு தண்ணீரை பீய்ச்சி அடித்தும் போராட்டக்காரர்களை கலைக்க முயற்சிக்கலாம். இந்த மூன்று முயற்சிகளும் தோல்வி அடைந்துவிட்டால் துப்பாக்கிச்சூடு நடத்தப்போவதாகவும் அதனால் உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்று போராட்டக்காரர்களுக்கு ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்க வேண்டும். பின்னர் கலவரக் கொடியை ஏற்ற வேண்டும். இவை அனைத்துக்குப் பின்னும் கலைந்து செல்லவில்லை என்றால் முதலில் வானத்தை நோக்கி சுட வேண்டும், அதன் பிறகு இடுப்புக்கு கீழ் தான் குறிவைத்து சுட வேண்டும். அனுமதியின்றி கூடியிருப்பவர்களை கலைக்கவே துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டும். துப்பாக்கிச்சூடு நடத்துபவருக்கு அனுமதியின்றி கூடியிருப்பவர்கள் மீது தனிப்பட்ட விரோதம் இருக்கக்கூடாது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com