\
ராணிப்பேட்டை: தீரன் பட பாணியில் நடைபெற்ற கொள்ளை சம்பவம்

ராணிப்பேட்டை: தீரன் பட பாணியில் நடைபெற்ற கொள்ளை சம்பவம்

ராணிப்பேட்டை: தீரன் பட பாணியில் நடைபெற்ற கொள்ளை சம்பவம்
Published on

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே, தீரன் பட பாணியில் துப்பாக்கியால் சுட்டு 25 சவரன் நகை மற்றும் 40 ஆயிரம் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரக்கோணம் அடுத்த கன்னிகாபுரம் என்ற கிராமத்தில்  புஷ்கரன், அவரது தாய், பாட்டி ஆகியோருடன் வசித்து வருகிறார். நேற்று நள்ளிரவு அவரது வீட்டை மர்ம நபர்கள் தட்டியுள்ளனர். யார் என்று கேட்டதும், வீச்சருவாளைக்கொண்டு வீட்டை உடைக்க மர்ம நபர்கள் முயன்றுள்ளனர்.

சுதாரித்துக்கொண்ட புஷ்கரன், தாய், கதவை திறக்க மறுத்துள்ளனர். இந்நிலையில், மர்ம நபர் ஒருவர் கதவு வழியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார்கள். அதில் வீட்டில் இருந்தவர்கள் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் 25 சவரன் நகை மற்றும் 40 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்துச்சென்றுள்ளனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com