மதுரை சுங்கச்சாவடியில் துப்பாக்கிச் சூடு

மதுரை சுங்கச்சாவடியில் துப்பாக்கிச் சூடு

மதுரை சுங்கச்சாவடியில் துப்பாக்கிச் சூடு
Published on

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில், காரில் வந்தவர்கள் கட்டணம் செலுத்த மறுப்பு தெரிவித்து துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காரில் வந்த சிலர் சுங்கச்சாடிவயில் இருந்த ஊழியர்களிடம் கட்டணம் செலுத்த மறுப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். பின்பு காரில் வந்த ஒருவர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. துப்பாக்கியால் சுட்ட நபரை ஊழியர்களே மடக்கிப் பிடித்தனர். அந்த நபரிடம் திருமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மற்றும் காரில் தப்பிய சிலரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com