\
எதிர்பாராதவிதமாக வெடித்த துப்பாக்கி: பாதுகாவலர் படுகாயம்

எதிர்பாராதவிதமாக வெடித்த துப்பாக்கி: பாதுகாவலர் படுகாயம்

எதிர்பாராதவிதமாக வெடித்த துப்பாக்கி: பாதுகாவலர் படுகாயம்
Published on

சென்னையில் வங்கி ஏடிஎம்மிற்கு பணத்தை கொண்டு சென்ற வேனிற்குள் துப்பாக்கி வெடித்ததில், தனியார் பாதுகாவலரின் கையில் குண்டு பாய்ந்தது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஏடிஎம்மில் பணம் நிரப்ப சென்ற வேனில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புக்காக சென்ற துரைசாமி என்ற பாதுகாவலர், வேனிற்குள் அமர்ந்திருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக துப்பாக்கி வெடித்து பாதுகாவலர் துரைசாமியின் கையில் குண்டு பாய்ந்தது. துப்பாக்கி சத்தம் கேட்டதும் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து தேனாம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். படுகாயமடைந்த துரைசாமி ராமாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து தேனாம்பேட்டை போலீசார் துப்பாக்கியையும் வேனையும் பறிமுதல் செய்தனர். சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.‌

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com