தமிழ்நாடு
தோட்டாக்கள் இருந்ததால் அச்சம் - கொள்ளையடித்த பொருட்களை வீசிவிட்டு ஓடிய கொள்ளையர்கள்!!
தோட்டாக்கள் இருந்ததால் அச்சம் - கொள்ளையடித்த பொருட்களை வீசிவிட்டு ஓடிய கொள்ளையர்கள்!!
(மாதிரிப்படம்)
கொள்ளையடித்த பொருட்களில் துப்பாக்கி தோட்டாக்கள் இருந்ததால் கொள்ளையர்கள் பயந்து, அவற்றை வீசிவிட்டு தப்பிய சம்பவம் மதுரையில் நிகழ்ந்துள்ளது.
மதுரை ஜீவா நகரில் உள்ள பட்டறை அருகே வீட்டு உபயோக பொருட்களுடன் தோட்டாக்கள் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதேவேளையில் விஜய் என்பவர், தன்னை 2 இரண்டு பேர் தாக்கிவிட்டு வீட்டில் இருந்த பொருட்களை திருடிச் சென்றதாக புகாரளித்தார். அப்போது பட்டறையில் கிடந்த பொருட்கள் விஜய் வீட்டில் திருடப்பட்டவை என்றும் தோட்டாக்களைக் கண்ட கொள்ளையர்கள் அவற்றை வீசிச் சென்றதும் தெரியவந்தது.
தோட்டாக்கள் குறித்து விஜயிடம் கேட்ட போது, தனது தந்தையின் அனுமதி பெற்ற துப்பாக்கியை 7 ஆண்டுகளுக்கு முன் காவல்துறையிடம் ஒப்படைத்துவிட்டதாகவும் ஆனால், தோட்டாக்கள் அவரிடத்திலேயே இருந்ததாகவும் கூறியுள்ளார்.