ஒரு மணி நேரத்தில் 2,743 சிட் அப்ஸ்... திருமங்கலம் ராணுவ வீரர் கின்னஸ் சாதனை

ஒரு மணி நேரத்தில் 2,743 சிட் அப்ஸ்... திருமங்கலம் ராணுவ வீரர் கின்னஸ் சாதனை
ஒரு மணி நேரத்தில் 2,743 சிட் அப்ஸ்... திருமங்கலம் ராணுவ வீரர் கின்னஸ் சாதனை

மதுரையில் ராணுவ வீரர் ஒருவர் ஒரு மணி நேரத்தில் 2,743 சிட் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

சிட் அப்ஸ் என்பது இரண்டு கைகளையும் தலையோடு கோர்த்தபடி, படுக்கை நிலையில் இருந்து வேகமாக எழுந்து கால்களை தொட்டு மீண்டும் படுக்கை நிலைக்குச் செல்லும் உடற்பயிற்சியாகும். இந்த உடற்பயிற்சியை ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ராபர்ட் என்பவர் ஒரு மணி நேரத்தில் 2,289 சிட் அப்ஸ் செய்து, கின்னஸ் சாதனை படைத்திருந்தார்.

இதை முறியடிக்க, மதுரை மாவட்டம் திருமங்கலம், அண்ணா நகரைச் சேர்ந்த ராணுவ வீரரான ராமு (35) என்பவர் திட்டமிட்டு கடந்த 2016 ஆம் ஆண்டு 2,507 சிட் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்திருந்தார். இந்நிலையில். இவருடைய சாதனையை இவரே முறியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

இதற்காக பல ஆண்டுகளாக கடும் பயிற்சி மேற்கொண்டு வந்த இவர், இன்று பயிற்சியாளர்கள், பொதுமக்கள் முன்னிலையில் திருமங்கலம் நகர் காவால் நிலைய ஆய்வாளர் மாய ராஜலட்சுமி கொடியசைத்து சாதனை முயற்சியை தொடக்கிவைத்தார்.

இதையடுத்து ஒரு மணி நேரத்தில் 2,743 சிட் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து திருமங்கலம் டிஎஸ்பி வினோதினி கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com