
நிலத்தின் வழிகாட்டு மதிப்பு பல்வேறு நகரங்களில் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் புதிதாக வீட்டுமனை வாங்குவோர் பெரிதளவில் பாதிக்கப்படுவார்கள் என்று ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள். இது குறித்து ரியல் எஸ்டேட் சங்கத்தைச் சேர்ந்த குமாரை சந்தித்து அவருடன் நேர்காணல் நடத்தினோம்.
அவர் கூறுகையில், “சதுர அடிக்கு ரூ.300 என்பது மிக சாமானியர்கள் வாங்கும் இடங்களாக இருக்கும். சமீப காலங்களில் நிறைய அறிவிப்புகள், அரசின் வருமானத்தை அதிகரிப்பதற்காக பதிவுத் துறையில் இருந்து வந்த வண்ணம் தான் உள்ளது. இதன் மூலம் புரிவது அரசாங்கத்திற்கு வருமானம் அதிகம் தேவைப்படுகிறது என்பது தான். எந்தெந்த இடங்களில் வருமானத்தை ஈட்டலாம் என யோசித்து என்னென்ன செய்ய முடியுமோ அனைத்தையும் செய்கிறார்கள்” என்றார். பேட்டியின் முழுவதும் செய்தியில் இணைக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ளது.