தடுப்பூசி செலுத்தி கொள்வதில் தமிழகத்திற்கே வழிகாட்டி திருவாரூர் மாவட்டம்: மா.சுப்ரமணியன்

தடுப்பூசி செலுத்தி கொள்வதில் தமிழகத்திற்கே வழிகாட்டி திருவாரூர் மாவட்டம்: மா.சுப்ரமணியன்

தடுப்பூசி செலுத்தி கொள்வதில் தமிழகத்திற்கே வழிகாட்டி திருவாரூர் மாவட்டம்: மா.சுப்ரமணியன்

தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதில் தமிழகத்திற்கே வழிகாட்டி திருவாரூர் மாவட்டம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.

திருவாரூர் மாவட்டத்தில் கொடிக்கால்பாளையம் அரசு நகர்ப்புற மருத்துவமனையில் நடைபெற்ற கொரோனா முகாமை ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், “இன்று மதியம் ஒன்றரை மணி நிலவரப்படி தமிழகத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்துபவர்கள் ஆர்வமாக செலுத்தி கொள்கின்றனர். இன்று மாலை 7 மணி வரை இந்த முகாம் தமிழகம் முழுதும் நடைபெறும், திருவாரூர்  மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் 61.4 சதவீதம், இன்று மாலைக்குள் இந்த சதவீதம் சற்று அதிகரிக்கும். திருவாரூர் மாவட்டத்தில் ஆறாவது தடுப்பூசி முகாம் 500 இடங்களில் நடைபெற்று வருகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் இன்று 50 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. திருவாரூரில் ஒரு லட்சத்து 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. திருவாரூர் மாவட்டம் தான் தமிழகத்திற்கு முன்னுதாரணமாக விளங்குகிறது, னென்றால் திருவாரூர் மாவட்டம் காட்டூர் என்ற ஊராட்சியில் அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளார்கள், காட்டூர் என்ற ஊராட்சி தமிழகத்திற்கு ஒரு முன்மாதிரியான ஊராட்சியாக விளங்குகிறது, பதினோரு ஊராட்சிகளில் முழுமையாக தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது” என தெரிவித்தார்

திருவாரூர் மாவட்டத்தில் துணை சுகாதார நிலையங்களை சீரமைக்க வேண்டும் என்று மாண்புமிகு முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது அதன்படி19 துணை சுகாதார நிலையங்கள் தலா 30 லட்சம் வீதம் சீரமைக்கப்படும். திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் 40 லட்சத்திற்கு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன. ஒட்டுமொத்தமாக திருவாரூர் மாவட்டத்திற்கு இந்த நிதியாண்டில் 8 கோடியே 37 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்

தஞ்சாவூரில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் காலாவதியான மாத்திரைகளை அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்டுள்ளது என்று சட்டப்பேரவை பொது கணக்கு குழு ஆய்வு செய்து கூறியுள்ளது அது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கேள்விக்கு, இது குறித்த அறிக்கையை அவர்கள் சமர்ப்பித்த உடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்

மேலும், “ மத்திய அரசு தேவையான அளவுக்கு தடுப்பூசிகளை வழங்கி வருகிறது, அறுபத்தி ஆறு லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது அதை வைத்துக்கொண்டு ஆறாவது முகாம் தொடங்கியுள்ளோம். கல்லூரியில் சேரும் மாணவர்கள் 17 - 18 வயதுக்கு உட்பட்ட நபர்களாக இருக்கிறார்கள் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் கேட்டுக் கொண்டிருந்தோம், மருத்துவ வல்லுநர்களும் அதைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசு இதுகுறித்து முடிவு எடுத்து அறிவித்தால் தமிழகத்தில் அது நடைமுறைப்படுத்தப்படும். தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைகிறது என்று பொதுமக்கள் அலட்சியம் காட்டாமல் முகக்கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், எல்லாவற்றுக்கும் தீர்வு தடுப்பூசி போட்டுக்கொள்வது.

பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள முதல்வர் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். மதுப் பிரியர்கள் மற்றும் அசைவ பிரியர்கள் ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி போடுவதால் பெரும்பாலும் தடுப்பூசி போட சாக்குபோக்கு சொல்கிறார்கள், அதனால் தான் முகாம் சனிக்கிழமை மாற்றப்பட்டுள்ளதுஎன்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com