குட்கா, பான் விற்பனைக்கு லஞ்சம் - சிறப்புக் குழு விசாரணை

குட்கா, பான் விற்பனைக்கு லஞ்சம் - சிறப்புக் குழு விசாரணை
குட்கா, பான் விற்பனைக்கு லஞ்சம் - சிறப்புக் குழு விசாரணை

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா விற்பனைக்கு அமைச்சர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு குழு விசாரணையை தொடங்கி உள்ளது. 

தமிழக அரசின் விஜிலென்ஸ் கமிஷனர் ஜெயக்கொடி மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதற்காக, கூடுதல் டி.எஸ்.பி தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. குட்கா விற்பனைக்கு லஞ்சம் பெறப்பட்டதாக அமைச்சர் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் மீது பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் சிறப்பு குழு, விசாரணையை தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. முதற்கட்டமாக, குட்கா வியாபாரி மாதவராவ், மற்றும் ராஜேந்திரன் ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதற்கிடையே, சட்டப்பேரவையில் குட்காவைக் காட்டியதாக உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்ய கோரி, ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com