சண்டையை விலக்கச் சென்ற காவலர் - அடித்து சட்டையைக் கிழித்த குடிகாரர்கள்

சண்டையை விலக்கச் சென்ற காவலர் - அடித்து சட்டையைக் கிழித்த குடிகாரர்கள்

சண்டையை விலக்கச் சென்ற காவலர் - அடித்து சட்டையைக் கிழித்த குடிகாரர்கள்
Published on

புதுக்கோட்டையில் மதுபோதையில் காவலரை தாக்கி சட்டையைக் கிழித்த இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுக்கோட்டை தெற்கு ராஜவீதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி அருகே நேற்று மாலை புதுக்கோட்டை செல்லப்பா நகரைச் சேர்ந்த நாகேந்திரனும், மாப்பிள்ளையார்குளத்தைச் சேர்ந்த கோபாலும் மது போதையில் ஒருவரை மாற்றி ஒருவர் தாக்கிக்கொண்டிருந்தாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து புதுக்கோட்டை நகர காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவலர் ராஜேஷ் கண்ணன் சண்டையை விலக்கி விட்டுள்ளார். 

இதனையடுத்து ஆத்திரமடைந்த நாகேந்திரனும் கோபாலும் மது போதையில் காவலர் ராஜேஷ் கண்ணனை தாக்கி அவரது சட்டையை கிழித்துள்ளனர். இதனையடுத்து மது போதையில் இருந்த நாகேந்திரன், கோபால் ஆகிய இருவரையும் கைது செய்த நகர காவல் நிலைய போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com